சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

79-வது உலக சுகாதார மாநாடு: நுரையீரல் பரிசோதனை குறித்த அமைச்சர்களின் கருத்துக்கள் என்ற நிகழ்வில் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 21 MAY 2026 9:18AM by PIB Chennai

ஜெனீவாவில் 79-வது உலக சுகாதார மாநாட்டில், காசநோய் தடுப்பு கூட்டாண்மை அமைப்பின் நுரையீரல் பரிசோதனை குறித்த அமைச்சர்களின் கருத்துக்கள் என்ற  நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்.  “நுரையீரல் சுகாதார பரிசோதனையில் உங்களுடைய சுகாதார அமைப்பு சிக்கலை எதிர்கொள்கிறதா?” என்ற தலைப்பிலான நிகழ்வை இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜாம்பியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது.

அப்போது உரையாற்றிய அமைச்சர் திரு ஜெ பி நட்டா, உரிய நேரத்தில் பரிசோதனை செய்தல், தொடக்கத்திலேயே நோய் கண்டறிதல், அனைவருக்கும் சமமான மருத்துவ வசதி கிடைத்தல் ஆகியவை மக்களுக்கு உகந்த சுகாதார அமைப்புகளின் அடிப்படையாக அமைகின்றன என்று தெரிவித்தார். நுரையீரல் சுகாதார பரிசோதனையை வலுப்படுத்துவது என்பது  வெறும் தொழில்நுட்பம் அல்லது நோய் கண்டறியும் கருவிகள் பற்றியது மட்டுமின்றி அது உயிர்களைக் காப்பது, துயரங்களை நீக்குவது, அதிக சுகாதார செலவினங்களைத் தடுப்பது, வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது பற்றியது என்று குறிப்பிட்டார்.

காசநோய் ஒழிப்பதில், இந்தியாவின் அர்ப்பணிப்பையும் திரு ஜெ பி நட்டா எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263532&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2263652) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada , Malayalam