பிரதமர் அலுவலகம்
கத்தார் அமீருடன் பிரதமர் உரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2026 10:54PM by PIB Chennai
ஈத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், பிராந்திய பாதுகாப்பு கவலைகள் குறித்து விவாதிக்கவும் பிரதமர் திரு நரேந்திர மோடி, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இந்த உரையாடலின் போது, ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானிக்கும், கத்தார் நாட்டு மக்களுக்கும் தனது மனமார்ந்த ஈத் பெருநாள் வாழ்த்துகளைப் பிரதமர் தெரிவித்தார். ஆலோசனையின் போது, கத்தாருடனான இந்தியாவின் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அந்த பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மேலும், கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் அரவணைப்பு மற்றும் ஆதரவிற்காகத் தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் மோடி, அந்த பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார். ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் தங்களின் பொதுவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினர்.
பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
"எனது சகோதரர், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பேசினேன். அவருக்கும் கத்தார் மக்களுக்கும் எனது அன்பான ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
நாங்கள் கத்தாருடன் உறுதுணையாக நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, அப்பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவும் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.
ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்."
***
(Release ID: 2242768)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263203)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam