பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2026 5:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோனுடன் உரையாடி மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலைக் குறித்து விவாதித்தார். மோதலை தவிர்ப்பது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய நிலையிலான உறவின் உடனடி அவசியம் குறித்து விவாதித்தனர். அப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்த தங்களுடைய நெருங்கிய ஒத்துழைப்புத் தொடர்வதை திரு மோடியும், அதிபர் திரு மேக்ரோனும் எதிர்நோக்கியுள்ளனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து எனது நண்பரும், அதிபருமான திரு இமானுவேல் மேக்ரோனுடன் பேசினேன். மோதலைத் தவிர்ப்பது, பேச்சுவார்த்தை, ராஜ்ஜீய நிலையிலான உறவின் உடனடி அவசியம் குறித்து பேசினேன்.     

அப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்த எங்களுடைய நெருங்கிய ஒத்துழைப்புத் தொடர்வதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.”

***

(Release ID: 2242554)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263200) வருகையாளர் எண்ணிக்கை : 37