குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மறைந்த உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பி சி கந்தூரிக்கு குடியரசு துணைத்தலைவர் டேராடூனில் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 11:27AM by PIB Chennai

உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த மேஜர் ஜெனரல் பி சி கந்தூரிக்கு டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (20.05.2026) மரியாதை செலுத்தினார்.

தமது வாழ்க்கையை நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்கு அர்ப்பணித்த மேஜர் ஜெனரல் கந்தூரி, சிறந்த தலைவராகவும், புகழ்பெற்ற ராணுவ வீரராகவும் அனுபவமிக்க நிர்வாகியாகவும் நினைவுகூரப்படுவார் என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் மேஜர் ஜெனரல் கந்தூரியின் பங்களிப்பு, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு நீடித்த மரபின் அடையாளமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்.

***

(Release ID: 2263098)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263132) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam