ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரம்மபுத்ரா வாரியத்தின் உயர்நிலை ஆய்வு வாரியக் கூட்டம் குவஹாத்தியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 4:06PM by PIB Chennai

பிரம்மபுத்ரா வாரியத்தின் உயர்நிலை ஆய்வு வாரிய 14-வது கூட்டம் 2026 மே 19 அன்று  மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமையின் கீழ் குவாஹத்தியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ்பூஷன் சௌத்ரி மற்றும் இதர அமைச்சர்கள், மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களின் உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு  ஆற்றுப்படுகை மேலாண்மை முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர்.

பிரம்மபுத்ரா வாரியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர், மாநில நீர் சீர்திருத்தங்கள் கட்டமைப்பைத் தொடங்கி வைத்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நீர் நிர்வாக சீர்திருத்தங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது தொடங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு நீர் பாதுகாப்பு மையமாக உள்ளதென்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு முக்கியத் தூணாக திகழ்வதாகவும்  கூறினார்.

நீடித்த நீர் மேலாண்மைக்கு உள்கட்டமைப்பு உருவாக்கம் மட்டுமின்றி வலுவான நிர்வாக அமைப்புகள், சிறந்த கொள்கைகள், வலிமையான நிறுவனங்கள், தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்பு, சமூக பங்கேற்பு ஆகியவையும் தேவையானது என்று தெரிவித்தார்.

ஆற்றுப்படுகை மேலாண்மை, பெருந்திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல், வெள்ளம் மற்றும் அரிப்புத் தடுப்பு மேலாண்மை, திறன் மேம்பாடு, நிறுவன சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் பிரம்மபுத்ரா வாரியத்தின் முன்னேற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262787&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2262949) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Khasi , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada