குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பி சி கந்தூரியின் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 2:16PM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சருமான மேஜர் ஜெனரல் (ஓய்வு) பி சி கந்தூரியின் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (19.05.2026) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மேஜர் ஜெனரல் கந்தூரியின் மறைவால் நாடு ஒரு சிறந்த ராணுவ வீரரையும் திறன்மிக்க நிர்வாகியையும், அரசியல்வாதியையும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
தங்க நாற்கரச் சாலைத் திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் மேஜர் ஜெனரல் கந்தூரியின் தொலைநோக்குப் பார்வைகொண்ட பங்களிப்புகள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்கதாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், டேராடூன் சென்ற போது மறைந்த தலைவருடனான தமது சந்திப்புக் குறித்து நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், மக்களவையில் முன்னாள் சகாக்களாக தாங்கள் இருந்தது குறித்து அன்புடன் நினைவு கூர்ந்ததாக கூறியுள்ளார்.
இந்தத் துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் உத்தராகண்ட் மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release Id 2262727)
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262810)
வருகையாளர் எண்ணிக்கை : 6