ரெயில்வே அமைச்சகம்
கியூல் – ஜாஜா இடையே ரூ.962 கோடி செலவில் 3-வது வழித்தடத் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 11:35AM by PIB Chennai
அதிகப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஹவுரா - தில்லி வழித்தடத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்தை உறுதி செய்யவும், செயல் திறனை மேம்படுத்தவும் கியூல் – ஜாஜா இடையே ரூ.962 கோடி செலவில் 3-வது வழித்தடத் திட்டத்திற்கு (54 கிமீ) இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், அதிகப் போக்குவரத்துமிக்க ஹவுரா – தில்லி இடையேயான வழித்தடத்தில் செயல்திறனை மேம்படுத்துவதற்கு கியூல் – ஜாஜா இடையேயான 3-வது வழித்தடத் திட்டம் உதவிடும் என்றும் அத்துடன் நேரம் தவறாமைக்கும் தடையற்ற ரயில் சேவைகளுக்கும் வழி வகுக்கும் என்று கூறியுள்ளார். கூடுதல் வழித்தட உள்கட்டமைப்புப் பணிகள், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் அப்பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தகப் போக்குவரத்திற்கு உதவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
54 கிமீ தொலைவிலான இந்த 3-வது வழித்தடத் திட்டம் பயணிகள் நெரிசலைக் குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262633®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262715)
வருகையாளர் எண்ணிக்கை : 8