பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நார்வே நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 7:35PM by PIB Chennai

ஆஸ்லோவில் நடைபெற்ற ஒரு விழாவில், நார்வேயின் மேன்மை பொருந்திய மன்னர் ஐந்தாம் ஹரால்ட், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதை வழங்கினார். இந்த விருது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் நார்வேயின் மிக உயர்ந்த கௌரவமாகும். மேலும், நார்வே மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இது வழங்கப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு மோடி, இந்த விருதை வழங்கியதற்காக மேன்மை பொருந்திய ஐந்தாம் ஹரால்டு மன்னருக்கும் நார்வே மக்களுக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவர் இந்த விருதை இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புக்கு அர்ப்பணித்ததுடன், இது இந்திய மற்றும் நார்வே மக்களிடையே நிலவும் நீடித்த அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் பாசத்திற்குக் கிடைத்துள்ள மரியாதை என்றும் குறிப்பிட்டார்.

 

பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது, இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையே நிலவும் ஆழமான நல்லெண்ணப் பிணைப்புகளின் சின்னமாகத் திகழ்வதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளின் நட்பு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த பயணத்திற்கு வழிகாட்டும்.

 

(Release ID: 2262483)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262536) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati