பிரதமர் அலுவலகம்
செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஏஎஸ்எம்எல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைப் பிரதமர் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
16 MAY 2026 10:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, குஜராத்தின் தோலேராவில் உள்ள குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) உற்பத்தி ஆலைக்கு ஆதரவளிப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏஎஸ்எம்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை பார்வையிட்டார்.
குஜராத்தில், இந்தியாவின் முதல் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏஎஸ்எம்எல் இணைந்து செயல்படும் முடிவை இரு பிரதமர்களும் வரவேற்றனர். நாட்டில் ஒரு குறைக்கடத்தி சூழலமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் பயணத்தில் இந்த ஒத்துழைப்பு ஒரு முக்கிய படியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஏஎஸ்எம்எல் என்பது நெதர்லாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமாகும். இது குறைக்கடத்தி சில்லுகள் (சிப்) தயாரிப்பில் இன்றியமையாத தேவையாக உள்ள உயர்-துல்லிய லித்தோகிராபி உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ், இந்திய மின்னணு - குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனமாகும். இது குஜராத்தில் ஒரு குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது.
***
(Release ID: 2261878)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2262042)
आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam