ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு–மும்பை விரைவு ரயில் : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 3:40PM by PIB Chennai

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (17.05.2026) பெங்களூரு - மும்பை இடையேயான விரைவு ரயிலை காணொலிக் காட்சி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது கர்நாடகா - மகாராஷ்டிரா இடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தெற்கு, வடக்கு கர்நாடகாவின் நீண்டகால கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் படுக்கை வசதி சேவை விரைவில் தொடங்கப்படும் என அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் ரயில்வே நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும், கர்நாடகா முழுவதும் ரயில் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கர்நாடகாவில் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், 2,160 கோடி செலவில் 61 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அவற்றில் 9 ரயில் நிலையப் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார். பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையம் 485 கோடி செலவிலும், யஷ்வந்த்பூர் நிலையம் 367 கோடி செலவிலும் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்ரார். பெங்களூருவை ஹைதராபாத் மற்றும் சென்னையுடன் இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதையும் திரு அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா, புதிய பெங்களூருமும்பை ரயில், கர்நாடகாவின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில், பெங்களூரு மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பி.சி. மோகன், மாநிலங்களவை உறுப்பினர் திரு லெஹர் சிங் சிரோயா, மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா, மூத்த ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261980&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2262010) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Telugu , Kannada