பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மேற்கொண்ட பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 3:46PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் மேற்கொண்ட போது கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

  1. இந்திய ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் நிறுவனத்திற்கும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் பெட்ரோலிய வசதிகளை மேம்படுத்தும். அத்துடன் இந்தியாவின் இயற்கை எரிவாயு, திரவ பெட்ரோலிய எரிவாயு சேமிப்பு வசதிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
  2. சமையல் எரிவாயு விநியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும் அபுதாபி, தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எல்பிஜி கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் வாய்ப்புகளை அதிகரிக்க வழி வகுக்கும்.
  3. உத்திசார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பாதுகாப்புத் தொழில் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
  4. வதினார் எனுமிடத்தில் கப்பல் பழுது பார்க்கும்  நிலையத்தை அமைப்பது தொடர்பாக கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் டிரைடாக்ஸ் நிறுவனத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வதினார் எனுமிடத்தில் கப்பல் பழுது பார்க்கும் மையத்தை அமைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
  5. கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம், டிரைடாக்ஸ் நிறுவனம், சிஇஎம்எஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கப்பல் பழுதுபார்ப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள கடல்சார் பணியாளர்களை மேம்படுத்தவும் இந்தியாவில் கப்பல் பழுது பார்க்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
  6. இந்தியாவின் சிடிஏசி ஐக்கிய அரசு எமிரேட்சின் ஜி42 ஆகிய  அமைப்புகளின் கூட்டு முயற்சியில் 8 சூப்பா் கம்ப்யூட்டிங் தொகுப்புகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது வெளியான அறிவிப்புகள்.

  1. அபுதாபி முதலீட்டு ஆணையமும், இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியமும் இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையை மேம்படுத்த ஒரு பில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொள்ள ஆய்வுகளைத் தொடங்கும்.
  2. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மேம்பாட்டு வங்கிக்கும் இந்தியாவின் ஆர்பிஎல் வங்கிக்கும் இடையே 3 பில்லியன்  டாலர் முதலீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  3. அபுதாபியின் ஐஎச்சி நிறுவனம் இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது

***

(Release ID: 2261385)

SS/PLM/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2261485) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam