நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தவறான விளம்பரங்கள், முறையற்ற வர்த்தக நடைமுறைகள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம்

प्रविष्टि तिथि: 15 MAY 2026 1:30PM by PIB Chennai

தவறான விளம்பரங்கள், முறையற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்வது காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. ஐஐடி - ஜெஇஇ, நீட் தேர்வு  ஆகியவற்றுக்குப் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் மீது இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகார்கள் அடிப்படையில்,  தாமாக முன்வந்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. 

இதில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு முறையற்ற வகையில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 31 நிறுவனங்களுக்கு மொத்தம் 1,39,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்  அடிப்படையிலும், பயிற்சித்துறையில் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்காக 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261329&reg=3&lang=1

***

SS/PLM/KPG/EA


(रिलीज़ आईडी: 2261430) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada , Malayalam