பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரஷ்ய வெளியுறவு அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 4:42PM by PIB Chennai

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ்பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (14.05.2026) சந்தித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையே நடைபெற்ற 23-வது ஆண்டு உச்சி மாநாட்டிற்காக 2025 டிசம்பரில் இரு தலைவர்களும் சந்தித்தது முதல் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் திரு லாவ்ரோவ் பிரதமருக்கு விளக்கினார்.

உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் நிலவும் சூழல் உட்பட பல்வேறு பிராந்தியம் மற்றும் உலகளாவிய பரஸ்பரம் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து பிரதமரும், வெளியுறவு அமைச்சர் திரு லாவ்ரோவும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவு ஆகியவை முன்னேறுவதற்கான சிறந்த வழி என்ற இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு குறித்து பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அதிபர் புதினுக்கு தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவிடம், பிரதமர் கேட்டுக்கொண்டார்.

***

(Release ID: 2261023) 

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261155) வருகையாளர் எண்ணிக்கை : 13