சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் சிங்க இனங்கள் தொடர்பான சிறப்பு நிகழ்வு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 12:09PM by PIB Chennai

குஜராத் மாநிலம் சசான் கிர் என்ற இடத்தில் சிங்க இனங்கள் தொடர்பான சிறப்பு நிகழ்வை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் இன்று (14.05.2026) தொடங்கிவைத்தார். இது சர்வதேச புலிகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டின் கீழ் நடைபெறும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், புலிகளை பாதுகாக்கும் முயற்சியாக சர்வதேச புலிகள் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்த வசுதைவ குடும்பகம் என்ற தொலைநோக்குப் பார்வைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். புலிகள் பாதுகாப்பு குறித்து உலகளவில் வளர்ந்து வரும் விழிப்புணர்வுக்கு இந்த தொலைநோக்குப் பார்வையே காரணம் என்று அவர் கூறினார்.

ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பில் சமூக பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்து திரு படேல் எடுத்துரைத்தார். சிங்கங்கள் இப்பகுதியின் பிரபல கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும், இது கிர் பகுதியில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சூழலியல் அணுகுமுறை மூலம் வனவிலங்கு பாதுகாப்புடன், பொருளாதார முன்னேற்றம் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதற்கு கிர் பகுதி ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறது என்று திரு பூபேந்திர படேல் கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260908&reg=3&lang=1

***

SS/IR/RJ/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260977) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada