பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 9:53PM by PIB Chennai
குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2026) திறந்து வைத்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது புனித நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் அதே நாளில் வதோதராவில் சர்தார்தாமில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி நிலையம் திறப்பு நிகழ்ச்சியும் ஆன்மீக நினைவு நிகழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டார். கற்பித்தல் உதவித் திட்டத்தை தொடங்கிவைத்ததோடு டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர், இந்த முன்முயற்சி இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரபாஸ்பதானில் சோம்நாத் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது குறித்தும் தற்போது நாம் மாற்றத்தக்க கல்வி நிறுவனங்களின் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளதை குறித்தும் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமும், வளர்ச்சி மேம்பாடும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளதற்கு அடையாளமாக இது திகழ்கிறது என்று கூறினார்.
2021-ம் ஆண்டு மகளிர் விடுதியின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், சர்தார்தாம் கல்வி நிறுவனம் சூரத், ராஜ்கோட், பூஜ், மெஹ்சானா மற்றும் தில்லியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு இக்கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி கற்றதாகவும் இது அவர்களுடைய எதிர்காலத்திற்குப் புதிய திசையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடுதியின் இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் மாணவிகளின் கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கு சர்தார்தாமின் இணையற்ற உறுதிப்பாட்டை அறிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார். மிகப் பெரிய புத்தொழில் நிறுவனங்கள், சிறிய நகரங்களிலிருந்து உருவாகி வருவதாகவும் இந்தப் புத்தொழில் நிறுவனங்களில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார். இத்துறைகள் ஒரு காலத்தில் கடினமானதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இது இளைஞர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது என்று தெரிவித்தார்.
கொவிட்-19 பேரிடர் பாதிப்பை எதிர்கொண்டது போல் மேற்காசியாவில் நிலவும் சூழலால் ஏற்பட்டுள்ள இடர்பாட்டையும் நாம் சந்தேகமின்றி இணைந்து எதிர்கொள்வோம் என்று கூறினார். ஒவ்வொரு முயற்சியின் மூலமும், பெரிதோ அல்லது சிறிதோ இறக்குமதிப் பொருட்களின் நுகர்வை நாம் அவசியம் குறைக்க வேண்டும் என்றும் அந்நியப் பொருட்களின் உபயோகத்தை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் இயக்கமாக நாம் மாற்ற வேண்டியது இத்தருணத்தின் அவசியம் என்று அவர் தெரிவித்தார். வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்ளூர் பொருட்களை நாம் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலம் நமது கிராமங்கள், நமது நகரங்கள் மற்றும் நமது நாட்டின் தொழில் முனைவோருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260055®=3&lang=1
***
SS/IR/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2260524)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam