பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
10 MAY 2026 11:10AM by PIB Chennai
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதவிக்காலத்திற்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர், மாநில மக்களின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். @TVKVijayHQ".
***
(Release ID: 2259495)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2259502)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam