பிரதமர் அலுவலகம்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் 11 ஆண்டுகால நிறைவையொட்டி, அதன் தாக்கம் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், நிதி உள்ளடக்கத் தன்மையை வலுப்படுத்தியுள்ளது - பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2026 6:10PM by PIB Chennai
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, முக்கிய சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் தாக்கம் குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார்.
இது தொடர்பாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இத்திட்டங்கள், மக்களுக்கு கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நிதிசார் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்திய அரசின் அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை விளிம்புநிலை மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்த திரு மோடி, இத்திட்டம், முதுமைக் காலத்தில், பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது என்றும், சமூகப் பாதுகாப்பை அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் மாற்றுவதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை இது பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெண்கள் பெறும் நன்மைகளும், அவர்களின் பங்கேற்பும் அதிகரித்து வருவதைக் கண்டு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்திட்டத்தின் வெற்றியில் பெண் சக்தியின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், முக்கிய சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நாட்டு மக்களின் வாழ்வில் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நிதிசார் பாதுகாப்பைக் கொண்டு வருவதில் அரசின் அர்ப்பணிப்பு உணர்வை இத்திட்டங்கள் பிரதிபலிக்கின்றன. பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை விளிம்பு நிலை மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை இந்தப் பதிவுகளின் தொடர் எடுத்துரைக்கிறது.
# 11 ஆண்டுகால “சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்”
“அடல் ஓய்வூதியத் திட்டம், பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இது முதுமைக் காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. சமூகப் பாதுகாப்பு அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்றுவதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பு உணர்வை இத்திட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, நமது பெண் சக்தி, இத்திட்டத்தின் மூலம் பயனடைவதைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259411®=3&lang=1
(Release ID: 2259411)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259446)
வருகையாளர் எண்ணிக்கை : 5