சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முன்கள சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த, திறன் சார்ந்த கட்டமைப்பின் கீழ், ஆரம்ப சுகாதாரப் பணிக் குழுக்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 12:19PM by PIB Chennai
விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், முன்கள சுகாதாரப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், அண்மையில் நிறைவடைந்த “புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல்: இந்தியாவின் சுகாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் சிறந்த நடைமுறைகள்” என்ற தலைப்பிலான 10-வது தேசிய மாநாட்டில், ஆரம்ப சுகாதாரப் பணிக் குழுக்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தொடங்கி வைத்தார்.
ஆரம்ப சுகாதாரப் பணிக் குழுக்களுக்கான இந்த ஒருங்கிணைந்த பயிற்சி, திறன் சார்ந்த கட்டமைப்பில், வலுவான மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பதாக உள்ளது. இது இந்தியாவின் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரிவான சுகாதார சேவையை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான முதலீடுகளில், இந்தியா முன்னணி நாடாக உள்ளது. அண்மை ஆண்டுகளில், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக ஈடுபாட்டில் வலுவான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது, சுகாதாரப் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாகவும், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே எளிதில் கிடைக்ககூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற அரசின் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கையின் குறிப்பிடத்தக்க முயற்சியாக, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் தொடக்கம் உள்ளது. இதன் கீழ், ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் மூலம் நோய்த் தடுப்பு, மேம்பாடு மற்றும் குணப்படுத்துதல், பராமரிப்பு ஆகிய சேவைகள் அடங்கும். மக்கள் சுகாதார மையங்கள், மகளிர் சுகாதார சேவை மையங்கள், கிராமப்புற சுகாதார மற்றும் துப்புரவுக் குழுக்கள் இணையதளம் வாயிலாக சமூகத்தை ஆழமாக ஈடுபடுத்துவது, வலுவான அணுகுமுறையாக இருந்து வருகிறது.
இந்தியா நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் நோக்கில், மேம்பட்ட எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், எளிதில் கிடைக்கக்கூடிய உயர் தரத்திலான சுகாதார சேவைகளுக்கான, தேவை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆரம்ப சுகாதாரக் குழுக்கள், பெரும்பாலும் சவாலான சூழல்களில், சமூகங்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றன.
சுகாதாரப் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும், உயர் நிலையிலான வசதிகளின் சுமையைக் குறைப்பதற்கும், சுகாதார அமைப்பின் மீதான பொது நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் இன்றியமையாதவர்கள். மேலும், ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான நாட்டைக் கட்டமைப்பதற்கான முக்கியத் தூண்களான தடுப்பு மற்றும் மேம்பாட்டு சுகாதாரப் பராமரிப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாடு, அத்துடன், பிரதமரின் 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அவர்களின் பங்களிப்பு இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258965®=3&lang=1
***
SS/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2259069)
வருகையாளர் எண்ணிக்கை : 5