தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026 - தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2026 2:26PM by PIB Chennai

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல்கள்,  மற்றும் 5 மாநிலங்களின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது, மாதிரி நடத்தை விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம்  பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மேற்கு வங்கத்தில் உள்ள ஃபால்டா சட்டமன்றத் தொகுதியைத் தவிர, மேற்குறிப்பிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.

தேர்தல் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் மற்றும் இவற்றின் எல்லைகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், அமலாக்க முகமைகளின் தலைவர்கள் ஆகியோருடன் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்தியது. வன்முறையற்ற, அச்சுறுத்தல் இல்லாத, பரிசுப் பொருட்கள் இல்லாத தேர்தலை உறுதி செய்ய 376 செலவினக் கண்காணிப்பாளர்களும், 7,470 பறக்கும் படைக் குழுவினரும், 7,470 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் ரூ. 105. 22 கோடி ரொக்கமும் ரூ. 4.94 கோடி மதிப்பிலான 137248. 53 லிட்டர் மதுபானமும்,  ரூ. 78. 61 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ. 165. 86 கோடி மதிப்பிலான உலோகப் பொருட்களும் ரூ. 307. 65 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் ரூ. 0. 33 கோடி ரொக்கமும் ரூ. 0. 39 கோடி மதிப்பிலான 18340. 35 லிட்டர் மதுபானமும், ரூ. 8. 99

கோடி மதிப்பிலான உலோகப் பொருட்களும் ரூ. 0. 02  கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளாவில் ரூ. 12. 12  கோடி ரொக்கமும் ரூ. 2. 51  கோடி மதிப்பிலான 78215. 3  லிட்டர் மதுபானமும்,  ரூ. 58. 47

கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ. 2. 25  கோடி மதிப்பிலான உலோகப் பொருட்களும் ரூ. 5. 33  கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அசாமில் ரூ. 6. 07  கோடி ரொக்கமும் ரூ. 22. 71  கோடி மதிப்பிலான 828248. 33  லிட்டர் மதுபானமும்,  ரூ. 70. 08 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ.3. 68  கோடி மதிப்பிலான உலோகப் பொருட்களும் ரூ.14. 7  கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேற்கு வங்கத்தில் ரூ. 31 . 14  கோடி ரொக்கமும் ரூ. 151 . 86  கோடி மதிப்பிலான 5858648. 98  லிட்டர் மதுபானமும்,  ரூ. 130. 28  கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், ரூ.69. 36  கோடி மதிப்பிலான உலோகப் பொருட்களும் ரூ.190. 77  கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 1444. 96 கோடியாகும்.

இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 2021 பொதுத் தேர்தல்களின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 1029.93 கோடியாக இருந்ததோடு ஒப்பிடுகையில், 2026-ல் பறிமுதல் 40.14% அதிகரித்துள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல்களின் போது இருந்த புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கத்தில் 68.92% என்ற அதிகபட்ச அதிகரிப்பும், தமிழ்நாட்டில் 48.40% என்ற அதிகரிப்பும் பதிவாகியுள்ளது.

(Release ID: 2258673)

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2258845) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam