பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்காசியாவில் நிலவி வரும் சூழல் குறித்தும் அதன் காரணமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 APR 2026 5:45PM by PIB Chennai

மேற்காசியாவில் நிலவி வரும் சூழலுக்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது நாட்டில் உள்ள எரிபொருள்களின் கையிருப்பு, கடல்சார் செயல்பாடுகள், மேற்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் நிலைத்தன்மையை பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்களை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம் நாட்டில் உரங்களின் கையிருப்பு குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளது. பொருட்களின் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வழங்கியது.

2026-ம் ஆண்டின் காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்களின் கையிருப்பு 390.54 லட்சம் மெட்ரிக் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உரங்களின் கையிருப்பு 193.38 லட்சம் மெட்ரிக் டன்களாக (50 சதவீதம்) உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் முதல் 3 வாரங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. முக்கியமான பொருட்கள், மின்னணு சாதனங்கள் இந்த ஏற்றுமதியில் அடங்கும்.

நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விரிவாக எடுத்துரைத்துள்ளது. 5 கிலோ எடை கொண்ட எஃப்டிஎல் சிலிண்டர்களின் விநியோகம் குறித்து நாடு முழுவதும் 9,750-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த முகாம்கள் மூலம் 1,64,000-க்கும் மேற்பட்ட 5 கிலோ எடை எஃப்டிஎல் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேற்காசிய கடற்பகுதிகளில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற்றதாக தகவல்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257008&reg=3&lang=1

 

****

TV/SV/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2257060) வருகையாளர் எண்ணிக்கை : 75