பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் முக்கியத் துறைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்

வீட்டு உபயோக எல்பிஜி-க்கான விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது; எல்பிஜி விநியோக மையங்களில் தட்டுப்பாடு ஏதும் பதிவாகவில்லை

இடுகை இடப்பட்ட நாள்: 16 APR 2026 5:56PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழ்நிலைக்கு மத்தியில், முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும் சீரான செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

சுரங்கத் துறை:

மேற்கு ஆசிய மேம்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மார்ச் 2026-ல் அமைக்கப்பட்ட, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் சுரங்க அமைச்சகம் இடம்பெற்றுள்ளது. இக்குழுவிற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்குகிறார். தொழில்துறை பங்குதாரர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்காக அவர்களிடம் கருத்துகள் கோரப்பட்டன. ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் விவரங்கள் தொழில்துறையுடன் பகிரப்பட்டன. பல்வேறு உள்ளீட்டுப் பொருட்களின் தேவை குறித்து விவாதிப்பதற்காக, பல்வேறு பங்குதாரர்களுடன் மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டன.

எரிசக்தித் துறை:

உள்நாட்டு எல்பிஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி (போக்குவரத்து) சிலிண்டர்களை விநியோகம் செய்வதை அரசு 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. வர்த்தக எல்பிஜியை பொறுத்தவரை மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. 15.04.2026 அன்று, 2500-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், திடீர் சோதனைகளைத் தீவிரப்படுத்தி, 238 எல்பிஜி விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதித்துள்ளதுடன், நேற்று வரை 63 எல்பிஜி விநியோகஸ்தர்களை இடைநீக்கம் செய்துள்ளன.

2026 மார்ச் 14 முதல் மொத்தம் 1,42,156 மெட்ரிக் டன் (74.8 லட்சத்திற்கும் அதிகமான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) வர்த்தக எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8400 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆட்டோ எல்பிஜியும் அடங்கும். ஏப்ரல்-26 மாதத்தில் (15.04.26 வரை) பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் சராசரி ஆட்டோ எல்பிஜி விற்பனை, 2026 பிப்ரவரி  மாதத்தில் இருந்த சராசரியான 177 மெட்ரிக் டன் (நாள் ஒன்றுக்கு) என்பது உயர்ந்து, சுமார் 286 மெட்ரிக் டன்னாக உள்ளது.

ஆட்டோ எல்பிஜி விற்பனை தனியார் நிறுவனங்களிடமிருந்து பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு மாறியுள்ளது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் ஆட்டோ எல்பிஜி விற்பனை 62% அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இந்த மிகப்பெரிய அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

மார்ச் 2026 முதல், சுமார் 4.58 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5.1 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.

15.04.26 வரை, சுமார் 35,000 பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

விமான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. பிப்ரவரி 28 முதல், இப்பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 10,10,000 பேர் பயணம் செய்துள்ளனர். தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இதுவரை 1,031 இந்திய மாணவர்கள் மற்றும் 657 இந்திய மீனவர்கள் உட்பட 2,348 இந்தியர்கள் ஈரானிலிருந்து ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்குச் சென்று அங்கிருந்து இந்தியா திரும்புவதற்கு வழிவகை செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252687&reg=3&lang=1

(Release ID: 2252687)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2252773) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam