பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் உடுப்பிக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 10:01PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தின் சில காட்சிகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்குச் சென்று, லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். மாணவர்கள், துறவிகள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 1 லட்சம் பேர் இந்த பக்திப் பெருவிழாவில் பங்கேற்று ஸ்ரீமத் பகவத் கீதையை ஒற்றுமையாக ஓதினார்கள்.
கிருஷ்ணர் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். மேலும், கனகதாசர், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாக நம்பப்படும் புனித ஜன்னலான கனகன கிண்டிக்கு கனக கவசத்தை (தங்க உறை) அவர் அர்ப்பணித்தார். உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடம், வேதாந்தத்தின் த்வைத தத்துவத்தின் நிறுவனர் ஸ்ரீ மத்வாச்சாரியாரால் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
இந்தப் பயணம் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் இடுகைகளில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"பக்தி, கற்றல் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இடமான உடுப்பியில் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உடுப்பியில் எனக்குக் கிடைத்த வரவேற்பு என் நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும். மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்."
"உடுப்பி, தர்மம், இரக்கம் மற்றும் சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றிய இடமாகும்."
"ஏழைகளுக்கு உதவும் பாதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அந்த உணர்வுதான் ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் போன்ற நமது பல்வேறு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது."
"கீதையால் ஈர்க்கப்பட்டு, நமது நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் முன்னேற்றத்திற்காக இந்த ஒன்பது சங்கல்பங்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..."
"லட்ச காந்த கீதையின் அற்புதமான மற்றும் தெய்வீக பாராயணம் அனைவரையும் ஆற்றலாலும் ஆழ்ந்த பக்தியாலும் நிரப்பியது. இவ்வளவு பெரிய கூட்டத்தினரால் கீதை ஒரே குரலில் உச்சரிக்கப்படுவதைக் கண்டது மறக்க முடியாத தருணம்."
"உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கான இன்றைய எனது பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கீதையை ஓதியது மறக்க முடியாத அனுபவம். சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்து கனக கவசத்தை கனகன கிண்டிக்கு பிரதிஷ்டை செய்தேன். கனகன கிண்டியில் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டிக்கொண்டேன். ஸ்ரீ கனகதாசருக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பையும் பெற்றேன்."
"உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திலிருந்து இன்னும் சில காட்சிகளை இங்கே பகிர்ந்துள்ளேன்."
(Release ID: 2196147)
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2249438)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam