தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: அமைதிக் காலம் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் போது தேர்தல் தொடர்பான விஷயங்களைக் காட்சிப்படுத்துவதற்கான தடை

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2026 3:26PM by PIB Chennai

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 (எட்டு) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று அறிவித்தது.

எந்தவொரு வாக்குப்பதிவுப் பகுதியிலும், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில்  (அமைதிக் காலம்), தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற சாதனங்கள் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் எந்தவொரு தேர்தல் விஷயத்தையும் காட்சிப்படுத்துவதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b) தடை செய்கிறது.

இதன்படி 09 ஏப்ரல் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் அசாமில் வரும் ஏப்ரல் 07 ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் ஏப்ரல் 09 ஆம் தேதி மாலை 5:00 மணி வரையும்,

அதேபோல் வரும் ஏப்ரல் 09 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் கேரளா மற்றும் புதுச்சேரியில் வரும் 07ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் 09  தேதி மாலை 6:00 மணி வரையும் அமைதி காலமாகும்.

இதேபோல், ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் வர ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் 23 ஆம் தேதி மாலை 6:00 மணி வரையும் அமைதிக் காலமாகும்.

இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 23 ஏப்ரல்  2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் முதல் கட்டத்தில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி மாலை 6:00 மணி வரையும், 29.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் இரண்டாவது கட்டத்தில் 27 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6:00 மணி வரையும் அமைதிக் காலமாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் தொலைக்காட்சி/வானொலி அலைவரிசைகள் மற்றும் கேபிள் நெட்வொர்க்குகளால் ஒளி/ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில், எந்தவொரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை ஊக்குவிப்பதாகவோ/பாதிப்பதாகவோ அல்லது தேர்தல் முடிவைப் பாதிப்பதாகவோ/தாக்கத்தை ஏற்படுத்துவதாகவோ கருதப்படும் எந்தவொரு விஷயமும், குழு உறுப்பினர்கள்/பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்/வேண்டுகோள்கள் உட்பட, இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் எந்தவொரு கருத்துக் கணிப்பை ஒளி/ஒலி பரப்புவதும் அடங்கும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126ஏ-இன் கீழ், 2026 ஏப்ரல் 9 (வியாழக்கிழமை) அன்று காலை 7:00 மணி முதல் 2026 ஏப்ரல் 29 (புதன்கிழமை) அன்று மாலை 6:30 மணி வரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்புவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248316&reg=3&lang=1

***

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2248553) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Gujarati