பிரதமர் அலுவலகம்
வெனிசுலாவின் தற்காலிக அதிபருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2026 9:22PM by PIB Chennai
வெனிசுலா குடியரசின் தற்காலிக அதிபர் மேதகு திருமதி டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் கோமேஸ் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்திய-வெனிசுலா கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் உலகளாவிய தெற்கிற்கான அவர்களின் நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
----
(Release ID: 2221068)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2247661)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam