பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் குவஹாத்தியில் குமார் பாஸ்கர் வர்மா பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 7:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குமார் பாஸ்கர் வர்மா பாலத்தை திறந்து வைத்தார். இந்தப் பாலம் குவஹாத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டம் என்று திரு  மோடி கூறியுள்ளார். "இணைப்பு, வசதி மற்றும் வர்த்தகம் கணிசமாக மேம்படுத்தப்படும். இது பக்தர்கள் காமாக்யா கோயிலுக்கு மிகவும் எளிதாகச் செல்ல உதவும்" என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்  பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது:

"பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குமார் பாஸ்கர் வர்மா பாலம் என்பது குவஹாத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டமாகும். இதன் மூலம் இணைப்பு, வசதி மற்றும் வர்த்தகம் கணிசமாக மேம்படுத்தப்படும். இது பக்தர்கள் காமாக்யா கோயிலுக்கு மிகவும் எளிதாகச் செல்ல உதவும்."

---

(Release ID: 2228184)

TV/PKV/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2243092) வருகையாளர் எண்ணிக்கை : 27