பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலை 167-ஐ 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 14 FEB 2026 1:00PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலை 167-ல் தெலங்கானாவின் குடேபெல்லூர்  முதல் மகபூப் நகர் வரை உள்ள 80.01 கிலோமீட்டர் நீளமான சாலை 4 வழிச்சாலை தரநிலைக்கு  மேம்படுத்தும் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழிங்கியுள்ளது. இத்திட்டத்தின்  மொத்த செலவு ரூ. 3,175.08 கோடி ஆகும். திட்டம் எச்ஏஎம் முறையில் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது இந்தப் பகுதியில் சாலை அமைப்பு குறைபாடு மற்றும் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் தாமதத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மக்னூர், மக்தால், மரிக்கால், தேவர்கத்ரா  உள்ளிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் காணப்படுகிறது.

இந்த மேம்பாட்டு திட்டம் தெலங்கானா மாநிலத்தின் நாராயணப்பேட்டை மாவட்டம் மற்றும் மகபூப்நகர்  மாவட்டங்களுக்கு பெரும் பலன்களை வழங்கும். சரக்கு போக்குவரத்து எளிதாகி,  செலவு குறையும். இதன் மூலம் பிராந்திய பொருளாதார வளர்ச்சி ஊக்கமடையும்.

மேலும், இந்தச் சாலை,  150 மற்றும் 167என் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்படும். இதனால் மாநிலத்தின் முக்கிய பொருளாதார மற்றும் சமூக மையங்களுக்கு சீரான இணைப்பு கிடைக்கும்.

திட்டம் நிறைவடைந்த பின், சுமார் 14.4 லட்சம் மனித-நாட்கள் நேரடி வேலைவாய்ப்பும், 17.9 லட்சம் மனித-நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227982&reg=3&lang=1

----

TV/PKV/EA


(रिलीज़ आईडी: 2243045) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam