பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலை-56 மேம்பாடு: ரூ.4,583 கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 1:02PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலை-56-ன் இரண்டு பகுதிகளை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தாமாசியா–பிடாடா/மோவி (47.46 கி.மீ) மற்றும் நாசர்போர்–மலோதா (60.21 கி.மீ) ஆகிய மொத்தம் 107.67 கி.மீ நீளப்பகுதிகள் இந்தத் திட்டத்தில் அடங்குகின்றன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.4,583.64 கோடியாகும். இது எச்ஏஎம் முறையில் செயல்படுத்தப்படும்.
இந்த நெடுஞ்சாலை ராஜஸ்தானில் தொடங்கி, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் வழியாக சென்று, வாபி அருகே தேசிய நெடுஞ்சாலை-48 உடன் இணைகிறது.
இந்தத் திட்டம் நர்மதா உள்ளிட்ட பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளுக்கு சிறந்த சாலை இணைப்பை வழங்கும். இதனால் தஹோத், சோட்டா உடேபூர், தாபி, பாரூச் மாவட்டங்களின் வளர்ச்சி மேம்படும். மேலும், கேவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை சுற்றுலா தளத்திற்கும் செல்ல வசதி அதிகரிக்கும்.
புதிய சாலை 100 கி.மீ வேகத்திற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 2.5 மணிநேரத்திலிருந்து 1.5 மணிநேரமாகக் குறையும்.
இந்தத் திட்டம் மூலம் சுமார் 19.38 லட்சம் மனித-நாட்கள் நேரடி வேலைவாய்ப்பும், 22.82 லட்சம் மனித-நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சில பகுதிகளில் பணிகள் 2025 நவம்பரில் தொடங்கியுள்ளன. திட்டம் நிறைவடைந்த பிறகு, போடேலி முதல் மலோதா வரை தொடர்ச்சியான நான்கு வழிச் சாலை இணைப்பு உருவாகி, போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227983®=3&lang=1
----
TV/PKV/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2243043)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam