மத்திய அமைச்சரவை
நொய்டா மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 1:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் நொய்டா செக்டார் 142 முதல் தாவரவியல் பூங்கா (நொய்டா) வரையிலான நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 8 உயர் மட்ட ரயில் நிலையங்களுடன் 11.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த வழித்தடம் அமையும். இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது நொய்டா, 61.62 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்டிருக்கும்.
நொய்டா மெட்ரோ ரயில் திட்டத்தின் நொய்டா பிரிவு 142 முதல் தாவரவியல் பூங்கா (நொய்டா) வரையிலான நீட்டிக்கப்பட்ட வழித்தடம் நகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்தத் திட்டம் நகரத்தில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் முக்கிய விரிவாக்கமாகும். இந்த விரிவாக்கம் நொய்டாவின் முக்கிய மண்டலங்களை தடையின்றி ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227985®=3&lang=1
***
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242577)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam