பிரதமர் அலுவலகம்
பீகாரில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2025 1:41PM by PIB Chennai
பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு நிதிஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரு நிதிஷ் குமார் பல ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொடுத்து சாதனை புரிந்த அனுபவம் வாய்ந்த நிர்வாகி என்றும், வரவிருக்கும் அவரது பதவிக்காலத்திற்காகத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பீகாரின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு சாம்ராட் சௌத்ரி, திரு விஜய் சின்ஹா ஆகியோருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் மக்களுக்கு சேவை செய்வதில் விரிவாகப் பணியாற்றியுள்ளனர் என்றும், அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பீகார் அரசில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள அனைவருக்கும் திரு நரேந்திர மோடி மேலும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பீகாரைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் அர்ப்பணிப்புள்ள நபர்களைக் கொண்ட அற்புதமான குழு இது என்றும், அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். அவர் ஒரு திறமையான, அனுபவம் வாய்ந்த நிர்வாகி. மாநிலத்தில் சிறந்த நிர்வாகத்தைக் கொடுத்துள்ளார். அவரது புதிய பதவிக்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!”
"பீகாரின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு சாம்ராட் சௌத்ரி, திரு விஜய் சின்ஹா ஆகியோருக்கு வாழ்த்துகள். இரு தலைவர்களும் பொது சேவையில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!"
"பீகார் அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பீகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் அர்ப்பணிப்புள்ள நபர்களின் அற்புதமான குழு இது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!"
***
(Release ID: 2192030)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2241489)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam