பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசியப் பாடலான "வந்தே மாதரம்" பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க விழாவின் சில முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2025 1:00PM by PIB Chennai

தேசியப் பாடலான "வந்தே மாதரம்" பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார். வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல எனவும் அது ஒரு மந்திரம் என்றும், அது ஒரு சக்தி என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். நாடு வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நவம்பர் 7-ம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"நாட்டின் விடுதலைக்காக எழுச்சியைத் தூண்டிய வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டைக் நாங்கள் கொண்டாடுகிறோம். தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினேன்."

"தில்லியில் வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிறகு, எனக்குப் புதிய உற்சாகம் கிடைக்கிறது."

"வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்."

"வந்தே மாதரத்தின் வரலாற்றுப் பயணத்தையும் அதன் கலாச்சார முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் நான் பார்வையிட்டேன்."

"இந்த நிகழ்ச்சி 'வந்தே மாதரம்' வெறும் பாடல் அல்ல. அது இந்தியாவின் ஆன்மாவின் வெளிப்பாடு என்பதை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் உணர்த்தியது."

"நாட்டு மக்கள் 140 கோடி பேரும் வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்துகிறோம்."

"பெருமைமிக்க ஒவ்வொரு இந்தியரின் முழக்கம் - வந்தே மாதரம்!"

***

(Release ID: 2187236)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241280) வருகையாளர் எண்ணிக்கை : 21