பிரதமர் அலுவலகம்
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 6:05PM by PIB Chennai
கோவாவில் நடைபெற்ற ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பர்கலி ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் தமது மனம் ஆழ்ந்த அமைதியால் நிறைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். துறவிகள் முன்னிலையில் அமர்வது ஒரு ஆன்மீக அனுபவம் என்பதை அவர் எடுத்துரைத்தார். இங்கு கூடியிருக்கும் ஏராளமான பக்தர்கள் இந்த மடத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான வலிமையை மேலும் மேம்படுத்துவதாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இன்று இந்த விழாவில் பங்கேற்பது தமது அதிர்ஷ்டம் என்று கூறினார்.
ஸ்ரீ சமஸ்தான் கோகர்ணா பர்தகலி ஜீவோட்டம் மடம் அதன் 550வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு எனவும் கடந்த 550 ஆண்டுகளில் இந்த நிறுவனம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது எனவும் அவர் கூறினார். சமூகத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்ட போதும் இந்த மடம் அதன் திசையை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மடம் மக்களுக்கு வழிகாட்டும் மையமாக உருவெடுத்தது என அவர் குறிப்பிட்டார்.
ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை, சமநிலை ஆகியவற்றை வழங்குவதே என்ற புரிதலை மடம் வெளிப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். கடினமான காலங்களிலும் கூட சமூகத்தைத் தாங்கி நிற்கும் வலிமைக்கு இந்த மடத்தின் 550 ஆண்டுகால பயணம் சான்றாகும் என்று அவர் கூறினார். ஒரு அமைப்பானது உண்மை, சேவை ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு செயல்படும் போது, அது தடுமாறாது எனவும் அது சமூகத்திற்கு வலிமையை அளிக்கிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தில், இந்த சிறப்பு நிகழ்வின் அடையாளங்களாக நினைவு நாணயங்கள், தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பல நூற்றாண்டுகளாக சமூகத்தை ஒன்றிணைத்த ஆன்மீக சக்திக்கு இவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
இப்போது இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மறுமலர்ச்சியைக் காண்கிறது என அவர் தெரிவித்தார். இது எதிர்கால சந்ததியினரை தங்கள் வேர்களுடன் இணைந்திருக்க ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனித மடம் 550 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், வரலாற்றைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தின் திசையையும் நிர்ணயிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
இந்த நிகழ்வில் கோவா ஆளுநர் திரு பூசபதி அசோக் கஜபதி ராஜு, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
---
(Release ID: 2195985)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241217)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam