பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள லோகபிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டட திறப்பு விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 DEC 2025 11:08PM by PIB Chennai
அசாமின் குவஹாத்தியில் உள்ள லோகபிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டட திறப்பு விழாவின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இது அசாமின் போக்குவரத்து இணைப்பு, பொருளாதார விரிவாக்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"குவஹாத்தியில் திறக்கப்பட்ட விமான நிலைய முனையக் கட்டடம், 'பாரம்பரியத்துடன் வளர்ச்சி' என்ற மந்திரத்தை உணர்த்துகிறது"
"அசாம் உட்பட முழு வடகிழக்கு பகுதியும் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவாயிலாக மாறி வருகிறது. வாரணாசியிலிருந்து திப்ருகர் வரையிலான கங்கா விலாஸ் கப்பல் பயணம், வடகிழக்குப் பகுதியை உலகளாவிய கப்பல் சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்துள்ளது."
"அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சியிலிருந்து காங்கிரஸ் அரசுகள் விலக்கி வைத்திருந்தன. கடந்த 11 ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், அசாமின் வளங்களை அதன் மக்களே பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளன."
"சிறப்பான வரவேற்புக்காக குவஹாத்தி மக்களுக்கு நன்றி. இந்த துடிப்பான நகரத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்"
***
(Release ID: 2207125)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2240801)
आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam