பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை கௌரவிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்குப் பிரதமர் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 DEC 2025 10:05PM by PIB Chennai

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவாக தபால் தலையை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், சிறந்த தொலைநோக்கு சிந்தனையும் திறமையும் கொண்ட ஒரு வலிமையான நிர்வாகி என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த காவலராக அவர் ஆற்றிய சிறப்புமிக்க பங்களிப்பையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

அவரைப் பற்றி நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு  முத்தரையரை (சுவரன் மாறன்)  கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், சிறந்த திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக  இருந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றி  இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

@VPIndia

@CPR_VP”

-----

(Release ID: 2203810)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2240773) வருகையாளர் எண்ணிக்கை : 59