தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 16 MAR 2026 1:36PM by PIB Chennai

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புகளை 2026 மார்ச் 15 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கான அறிவிப்புகள், கொள்கை முடிவுகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்த்தும்.

அரசு, பொது மற்றும் தனியார் சொத்துகளில் எழுதப்பட்டுள்ள அரசு மற்றும் கட்சி சார்ந்த விளம்பரங்களை நீக்குவது தொடர்பான நடைமுறைகளை கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

எந்தவொரு அரசியல் கட்சியினர், வேட்பாளர் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நபர் அரசுக்கு சொந்தமான இடங்கள் அல்லது வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவதை தடுத்தல், அரசு செலவில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடுத்தல் போன்றவைகளையும் கண்காணித்து உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. தனியார் கட்டட உரிமையாளர்களின் அனுமதியின்றி கொடிகள், பதாகைகள் அல்லது சுவரொட்டிகளுக்காக அவர்களுடைய கட்டடங்களைப் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்களை மக்களும், அரசியல் கட்சியினரும் சி-விஜில் செயலி மூலம் அளிக்கலாம். 

அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ கடமைகளை தேர்தல் பணியுடன் இணைப்பதோ அல்லது அரசு எந்திரம், போக்குவரத்து அல்லது நபர்களை தேர்தல் பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சியினர் கூட்டங்களை நடத்துவது தொடர்பாக  போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240566&reg=3&lang=1

***

(Release ID: 2240566)

TV/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2240698) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , English , Gujarati , Urdu , Punjabi , Telugu , Malayalam