உள்துறை அமைச்சகம்
பூர்ண பிரம்ம ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 215-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் புனித மதுவா தர்மா திருவிழாவையொட்டி, மதுவா சமூகத்தினருக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2026 11:37AM by PIB Chennai
பூர்ண பிரம்ம ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 215-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் புனித மதுவா தர்மா திருவிழாவையொட்டி, மதுவா சமூகத்தினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பதிவிட்டிருப்பதாவது
“பூர்ண பிரம்ம ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 215-வது பிறந்த தினத்தைக் குறிக்கும் புனித மதுவா தர்மா திருவிழாவையொட்டி, மதுவா சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தெய்வீக ஆத்மாவான தாக்கூர் அவர்கள், நமது ஞானத்தில் ஊடுருவி, பக்தி, சமத்துவம் மற்றும் அறவாழ்வு ஆகிய முத்துகளை வெளிக்கொணர்ந்தார். இவை தற்போது நமக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாகத் திகழ்கின்றன. இந்நெறிமுறைகளுக்கு மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாவில் நடைபெறும் 'மதுவா தர்ம திருவிழா 2026', நம்மிடையே உள்ள உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தட்டும்.”
***
(Release ID: 2240499)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2240591)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada