வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உணவுப்பொருட்கள், வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்பளிக்கிறது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAR 2026 12:43PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 மார்ச் 10 முதல் 14 வரை நடத்துகிறது. இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி திறன்களை எடுத்துக்காட்டும் வகையிலான அரங்கை வேளாண் மற்றும் பதிப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது.
இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், மாநில பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறையிரை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. இக்கண்காட்சியை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இதில் இத்தாலி தூதரக உயரதிகாரிகள், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பியூஷ் கோயல், இந்தியாவின் உணவு மற்றும் வேளாண்துறை உலகளவிலான வாய்ப்புகளில் புதிய கட்டத்தை அடைந்துள்ளதாக கூறினார். ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் கோடிக்கும் மேல் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி நடைபெறுவதாகவும், உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, நாடுமுழுவதும் விவசாயிகள், மீனவர்கள், உணவுப் பதப்படுத்துவோரின் பன்முகத் தன்மை மற்றும் வலிமையை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் உணவு மற்றும் வேளாண் ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238052®=3&lang=1
***
TV/IR/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2238175)
வருகையாளர் எண்ணிக்கை : 21