சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரத்த பாதிப்புகளுக்கான மருந்துகள் குறித்த பரிசோதனை விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வரைவு குறித்து, மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்

प्रविष्टि तिथि: 11 MAR 2026 9:37AM by PIB Chennai

1945 - ம் ஆண்டு மருந்துகள் விதிகளின் அட்டவணை எப் - ல் (ரத்த பாதிப்புகளுக்கான மருந்துகள் பரிசோதித்தல்), பகுதி 12 சி - ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெறும் வகையில், மார்ச் 9, 2026 அன்று இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரத்தப் பாதிப்புகளுக்கான மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான ஒழுங்குமுறைத் தேவைகளை, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தியல் தரநிலைகளுடன் சீரமைக்கவும், உலகளவிலான சிறந்த நடைமுறைகளின் கீழ் உத்தரவாதம் பெறவேண்டிய அவசியம் இல்லாத மருந்துகள் உற்பத்தியில், கூடுதல் சோதனை நடைமுறைகளை நீக்கவும் இந்த வரைவுத் திருத்தம் வகை செய்கிறது.

இந்திய மருந்தகம், பிரிட்டிஷ் மருந்தகம், யுனைடெட் ஸ்டேட்ஸ் மருந்தகம் மற்றும் ஐரோப்பிய மருந்தகம் ஆகியவற்றில், ரத்தத்தில் இருந்து  பிரித்தெடுப்பதற்கான மனித பிளாஸ்மாவின் அதிகாரப்பூர்வ தனிச்சிறப்புகளின்படி, வரையறை செய்யப்பட்ட மனித பிளாஸ்மாவிற்கு கடும் சோதனை நெறிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237960&reg=3&lang=1  

***

TV/SV/KR


(रिलीज़ आईडी: 2238131) आगंतुक पटल : 77
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Kannada , Malayalam