பிரதமர் அலுவலகம்
திரு மரூஃப் ராஸா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 10:05PM by PIB Chennai
பத்திரிகைத் துறையில் திரு மரூஃப் ராஸா அவர்களின் மரபை கவுரவிக்கும் வகையில் அவரது மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை உலகிற்கு திரு மரூஃப் ராஸா அவர்கள் வளமான பங்களிப்பை அளித்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களை தமது நுட்பமான புரிதல் மூலம் திரு ராஸா வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது துயரத்தை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், திரு ராஸாவின் மறைவு தமக்கு வலியை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பத்திரிகை உலகிற்கு திரு மரூஃப் ராஸா அவர்கள் வளமான பங்களிப்பை செய்துள்ளார். பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களை தமது நுட்பமான புரிதல் மூலம் திரு ராஸா வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவு தமக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது, அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் இரங்கல்கள்.”
***
(Release ID: 2233319)
TV/SMB/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235343)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam