பிரதமர் அலுவலகம்
கனடா பிரதமர் வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2026 10:16PM by PIB Chennai
கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்திய வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை, வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, இருநாட்டு மக்களுக்கான பகிரப்பட்ட வளம் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தைக் கட்டமைக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ்தளத்தில் கனடா பிரதமரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“பிரதமர் கார்னி, நீங்கள் மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள், உண்மையில் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு உங்களின் வருகை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
நம்பிக்கை, வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, இருநாட்டு மக்களுக்கான பகிரப்பட்ட வளம் ஆகியவற்றின் மூலம் எதிர்காலத்தைக் கட்டமைக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன்.”
***
(Release ID: 2235197)
TV/SMB/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235342)
வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam