பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே ஐ.நா. தலைமைச்செயலாளருடன் பிரதமரின் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 9:52PM by PIB Chennai

2026 பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே  பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐ.நா. தலைமைச்செயலாளர் திரு  அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.

செயற்கை நுண்ணறிவை  ஜனநாயகமயப்படுத்தி அதனை  மனிதர்களை மையமாகக் கொண்டதாக மாற்றும் நோக்கில் ஏஐ தாக்க உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக பிரதமரை ஐ.நா. தலைமைச்செயலாளர்  பாராட்டினார். செயற்கை நுண்ணறிவு குறித்த சுதந்திரமான சர்வதேச அறிவியல் குழுவை உருவாக்குவதில் ஐ.நா. தலைமைச்செயலாளர் மேற்கொண்ட முயற்சிகளையும், ஏஐ-ல் வளரும் நாடுகளுக்கு அளித்த ஆதரவையும் பிரதமர் பாராட்டினார். ஏஐ - க்கான மானவ்  தொலைநோக்குப் பார்வையையும், வளர்ச்சிக்கு ஒரு கிரியா ஊக்கியாக தொழில்நுட்பத்தின் பங்கினையும் பிரதமர் மோடி  வலியுறுத்தினார்.

சமகால எதார்த்தங்களைப்  பிரதிபலிக்கும் பலதுருவ உலகம் குறித்த கருத்துகளை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின், குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தின் அவசர  அவசியத்தையும் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

ஐ.நா. தலைமைச்செயலாளர்  குட்டரஸின் மீதமுள்ள பதவிக்காலம் முழுவதற்கும்  அவருக்குப் பிரதமர் மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2231016)

TV/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235278) வருகையாளர் எண்ணிக்கை : 16