பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 11:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் 2026 பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்றார். அப்போது பிப்ரவரி 17 அன்று மும்பையில் இந்தியா – பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்து இருதரப்பு பேச்சு நடத்தினார்கள். இது பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் 4-வது இந்திய பயணமாகும். 2025 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு மோடி, பிரான்சில் பயணம் மேற்கொண்டார்.

வரும் காலங்களில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு வழிகாட்டுவதற்கு சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மைக்கு நட்புறவை மேம்படுத்த இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். செயற்கை நுண்ணறிவு, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி தொடர்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற துறைகளில் பன்முக ஒத்துழைப்பு இருநாடுகளுக்கு இடையே விரிவடைந்துள்ளன. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்புகள் வலுவடைந்துள்ளன. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் திரு மோடிக்கு அதிபர் திரு மேக்ரோன் வாழ்த்து தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்து இந்தியா – பிரான்ஸ் தீர்மானத்தை நினைவு கூர்ந்த அவர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்த, சேவை அளிக்கக் கூடிய நம்பிக்கை மிக்க பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு உறுதிபூண்டனர். புதிய கண்டுபிடிப்பு மற்றும் திறன் குறித்த பணிக் குழுவிற்கு பிரான்ஸ் பங்களித்துள்ளது.

திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இருதலைவர்களும் வரவேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229412&reg=3&lang=2

 

AD/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235111) வருகையாளர் எண்ணிக்கை : 45