பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்

प्रविष्टि तिथि: 02 MAR 2026 7:10PM by PIB Chennai

“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி காலை 11:15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.

இந்தக் கருப்பொருளின் கீழ், (i) உற்பத்தி, தொழில்துறை மேம்பாடு & உத்திசார்துறைகள், (ii) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிதி & சந்தை அணுகல், (iii) நகரப் பொருளாதாரப் பகுதிகள் மற்றும் (iv) உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் சரக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நான்கு வெவ்வேறு வலைதளக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு, தொழில்துறை அளவை விரிவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமையை வலுப்படுத்துதல் மற்றும் முக்கியமான துறைகளின் அடித்தளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான எதிர்கால சீர்திருத்த உந்துதலை எடுத்துக்காட்டும். இந்த முன்னுரிமைகளை பயனுள்ள செயல்பாடாக மாற்றுவதில் நிபுணர்களின் விவாதங்கள் கவனம் செலுத்தும்.     

***

(Release ID: 2234645)

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2234764) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , Assamese , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Malayalam