பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடக்க நிகழ்வில் உரையாற்றிய காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 10:21PM by PIB Chennai

குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடக்க நிகழ்வில் உரையாற்றிய காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

“மைக்ரானின் செமிகண்டக்டர் தொழிற்சாலை தொடங்குவது தொழில்நுட்பத் தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் ஒரு மைல்கல்லாகும்”.

“சனந்தில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்குவதன் மூலம் உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புத் தொடரின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா மாறும். இந்தத் துறையில் நமது பங்களிப்பும் வலுவான வளர்ச்சிப் பெறும்”.

“இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் 2.0-வை நாம் அறிவித்துள்ளோம். இது இந்தியாவுக்குள்ளேயே பொருட்கள், பாகங்கள், சேவைகளுக்கான தேவையை, குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கச் செய்யும்.    

***

(Release ID: 2234094)

TV/SMB/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234639) வருகையாளர் எண்ணிக்கை : 54