உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 FEB 2026 1:41PM by PIB Chennai

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான தீர்வுகளை வடிவமைக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு அவர்களது ஆய்வுகள் உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த தினம் நம் அனைவரது விருப்பத்திற்கேற்ப புத்தாக்கம், கட்டமைத்தல், திறன் போன்றவற்றில் ஆர்வத்தையும் உறுதியையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233876&reg=3&lang=1  

***

TV/SV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233896) வருகையாளர் எண்ணிக்கை : 24