ரெயில்வே அமைச்சகம்
அக்னிவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: புதிய ஒத்துழைப்புத் திட்டம் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 6:48PM by PIB Chennai
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் அக்னிவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பிற்காக இந்திய ரயில்வேயும், இந்திய ராணுவமும் இணைந்து 'ஒத்துழைப்பு கட்டமைப்பு' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
முக்கிய வேலைவாய்ப்பு அம்சங்கள்:
ரயில்வே துறையில் நிலை-1 பணிகளில் 20 சதவீதமும், நிலை-2 மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளில் 10 சதவீதமும் முன்னாள் ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோல், முன்னாள் அக்னிவீரர்களுக்கு முறையே 10 சதவீதம் மற்றும் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2024–25 ஆம் ஆண்டில் மட்டும் 14,788 பணியிடங்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
உடனடி ஒப்பந்த நியமனங்கள்:
ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களை விரைவாக நிரப்ப, 5,000-க்கும் மேற்பட்ட 'பாயிண்ட்ஸ்மேன்' பணியிடங்களில் முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 9 ரயில்வே கோட்டங்கள் ராணுவ அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
ராணுவ வீரர்களின் ஒழுக்கம், தொழில்நுட்பத் திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், கதி சக்தி விஸ்வவித்யாலயாவுடன் இணைந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இதன் மூலம் ராணுவத்திலிருந்து சிவில் வாழ்க்கைக்குத் திரும்பும் வீரர்களுக்கு ஒரு சிறப்பான இரண்டாம் கட்ட வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233196®=3&lang=2
செய்திவெளியீட்டு எண்2233196
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233315)
வருகையாளர் எண்ணிக்கை : 7