தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: சர்வதேச பார்வையாளர்களிடம் இந்திய திரைப்படங்களைக் கொண்டு செல்ல மத்திய அரசு தீவிரம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 8:45PM by PIB Chennai

2026 ஆம் ஆண்டுக்கான பாஃப்தா திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படத்திற்கான விருதை லட்சுமிப்ரியா தேவியின் பூங் திரைப்படம் வென்றது. இந்த அங்கீகாரத்திற்காக, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும், தயாரிப்பாளர் லட்சுமிப்ரியா தேவி உள்ளிட்ட பூங் திரைப்படத்தின் குழுவினருக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த மகத்தான சாதனை இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு பெருமைமிக்க தருணத்தைக் குறிப்பதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட அர்த்தமுள்ள கதை சொல்லும் மரபுகளுக்கு வளர்ந்து வரும் உலகளாவிய பாராட்டை எடுத்துக்காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டில், திறமை வாய்ந்த திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு, உலகளாவிய தொழில்துறை செயல்பாட்டை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகளின் கீழ், பூங் திரைப்படம் ஃபிலிம் பஜாரில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின்னர், இந்த படம் 2024 ஆம் ஆண்டில் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், சிறந்த அறிமுக இயக்குனர் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைப்பட தயாரிப்பாளர்களை மேம்படுத்துதல், படைப்பாற்றல் சிறப்பை வளர்த்தல், இந்திய திரைப்படங்கள் சர்வதேச பார்வையாளர்களை சென்றடைவதற்கான பாதைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்  ஃபிலிம் பஜார் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா போன்ற தளங்களை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய அரசும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232861&reg=3&lang=1

(Release ID: 2232861)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232901) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam