மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு நாடுகளுடன் நாடாளுமன்ற உறவை மேம்படுத்த நாடாளுமன்ற நட்புறவுக் குழு அமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 4:07PM by PIB Chennai

இந்தியாவின் நாடாளுமன்ற உறவுகளை உலக நாடுகளுடன் விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் நாடாளுமன்ற நட்புறவு குழுவை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நியமித்துள்ளார். உலக நாடுகளின் நாடாளுமன்றங்களுடன் உரையாடல் மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதன் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

இந்த நட்புறவுக் குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திரு ரவிசங்கர் பிரசாத், டாக்டர் எம் தம்பிதுரை, திரு ப சிதம்பரம், பேராசிரியர் ராம் கோபால் யாதவ், திரு டி ஆர் பாலு, டாக்டர் ககோலி கோஷ் தஸ்திதார், திரு கௌரவ் கோகோய், திருமதி கனிமொழி கருணாநிதி, திரு மணீஷ் திவாரி, திரு டெரெக் ஓ பிரையன், திர அபிஷேக் பானர்ஜி, திரு அசாதுதீன் ஒவைசி, திரு அகிலேஷ் யாதவ், திர கே சி வேணுகோபால், திரு ராஜீவ் பிரதாப் ரூடி, திருமதி சுப்ரியா சுலே, திரு சஞ்சய் சிங், திரு பைஜயந்த் பாண்டா, டாக்டர் சஷி தரூர், டாக்டர் நிஷிகாந்த் துபே, திரு அனுராக் சிங் தாக்கூர், திரு பர்த்ருஹரி மஹ்தாப், திருமதி டி புரந்தேஸ்வரி, திரு சஞ்சய் குமார் ஜா, திருமதி ஹேமா மாலினி, திரு பிப்லப் குமார் தேப், டாக்டர் சுதன்ஷு திரிவேதி, திரு ஜகதாம்பிகா பால், டாக்டர் சஸ்மித் பத்ரா, திருமதி அபராஜிதா சாரங்கி, திரு ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, திரு பி வி மிதுன் ரெட்டி மற்றும் திரு பிரபுல் படேல் உள்ளிட்டோர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்குவார்கள்.

இலங்கை, ஜெர்மனி, நியுசிலாந்து, ஸ்விட்சர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, பூடான், சவூதி, இஸ்ரேல், மாலத்தீவுகள், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் நடாளுமன்றம், தென்கொரியா, நேபாளம், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, ஓமன், ஆஸ்திரேலியா, கிரீஸ், சிங்கப்பூர், பிரேசில், வியட்நாம், மெக்சிகோ, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகள் நாடாளுமன்ற நட்புறக்குழுவில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் சகாக்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்தவும், நாடாளுமன்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், வழக்கமான விவாதம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231763&reg=3&lang=1

****

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2231919) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada