பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் நிகழ்ச்சியின் 131-வது அத்தியாயத்தில் ஆற்றிய தமது உரையின் சிறப்பம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 FEB 2026 7:17PM by PIB Chennai
மனதின் குரல் நிகழ்ச்சியின் 131-வது அத்தியாயத்தில் தமது உரையின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
“செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு உச்சி மாநாடு 140 கோடி இந்தியர்களின் திறமையை வெளிப்படுத்தியது. வரும் காலங்களில் இந்தியா இந்த உலகில் தொடர்ந்து முன்னேற்றம் அடையும்.”
“ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்களின் எண்ணிக்கை நமக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்றாகும். ”
“கேரளாவைச் சேர்ந்த அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு இந்தியா அஞ்சலி செலுத்துகிறது. அவரது பெற்றோரான திரு அருண் ஆபிரகாம் மற்றும் திருமதி ஷெரின் ஆன் ஜான் ஆகியோர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்திருப்பது, வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்."
“நாளை தொடங்கும் ராஜாஜி உத்சவம், குடியரசுத் தலைவர் மாளிகையின் பாராட்டத்தக்க முயற்சி. எனது வாழ்த்துகள்.”
"டிஜிட்டல் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைதுகளுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருப்போம்! இதில் ரிசர்வ் வங்கியின் முயற்சிகளை ஆதரிப்போம்.”
"இந்தியாவின் விவசாயிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.”
“கேரள கும்பமேளா என்று பிரபலமாக அழைக்கப்படும் விழா, மாநில மக்களுக்கும் நமது புகழ்பெற்ற கலாச்சாரத்திற்கும் இடையிலான வலுவான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.”
"செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்களின் இதயங்களில் வாழ்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அவரது முயற்சிகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு எப்போதும் நினைவில் இருக்கும்”
“இந்தியப் பொருட்களை வாங்குவோம், இந்திய உற்பத்தியாளர்களை ஆதரிப்போம்!”
***
(Release ID: 2231534)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231555)
வருகையாளர் எண்ணிக்கை : 7