மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
புது தில்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு நிறைவடைந்தது
கூட்டான, நம்பகமான, செயற்கை நுண்ணறிவுக்கான பகிரப்பட்ட உலகளாவிய பார்வையை 88 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஆதரிக்கின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 4:21PM by PIB Chennai
பிப்ரவரி 18-19 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026, செயற்கை நுண்ணறிவு மீதான உலகளாவிய ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. இதில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த புது தில்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தப் பிரகடனத்தை 88 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன. இது பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் பரந்த அளவிலான உலகளாவிய ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கிறது.
அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் இந்தப் பிரகடனம், செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மனிதகுலம் முழுவதும் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்:
* சர்வதேச ஒத்துழைப்பு
* தேசிய இறையாண்மையை மதித்தல்
* நம்பகமான கட்டமைப்புகள் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல்
இந்தப் பிரகடனம் ஏழு முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை:
* செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துதல்
* பொருளாதார வளர்ச்சி & சமூக நன்மை
* பாதுகாப்பான & நம்பகமான செயற்கை நுண்ணறிவு
* அறிவியலுக்கான செயற்கை நுண்ணறிவு
* சமூக அதிகாரமளிப்பு
* மனித மூலதன மேம்பாடு
* மீள்தன்மை வாய்ந்த, திறமையான & புதுமையான செயற்கை நுண்ணறிவு அமைப்புகள்
இந்த உச்சிமாநாடு நீண்டகால சர்வதேச ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அம்சமாக செயற்கை நுண்ணறிவை நிலைநிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231208®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231295)
வருகையாளர் எண்ணிக்கை : 13