பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிசோரம் மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 FEB 2026 9:33AM by PIB Chennai

மிசோரம் மாநிலம் உதயமான தினத்தையொட்டி, இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணை மற்றும் பரிவு போன்ற உயர் பண்புகளைக் கொண்ட மிசோரம் மாநில மக்களின் வலுவான சமூக உணர்வு மற்றும் கருணை உள்ளத்திற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மிசோரம் மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகள்.

அற்புதமான இயற்கை அழகுடன் கூடிய மிசோரம் மாநிலத்தின் நீடித்த கலாச்சார மரபுகள், அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களால் அறியப்பட்ட ஒன்று, வலுவான கலாச்சர உணர்வு மற்றும் கருணை போன்றவை அம்மாநில மக்களின் சிறந்த பண்புகளாக உள்ளன.   சிறந்த பாரம்பரியம், இசை மற்றும் அன்றாட வாழ்க்கையின் பிற அம்சங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் வளமான மிசோர மாநில மக்களின் கலாச்சார உணர்வுகள் மிகவும் உத்வேகம் அளிப்பதா உள்ளது.

மிசோரம் மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்ட வேண்டும்.

***

(Release ID: 2230564)

AD/SV/RJ/RK


(रिलीज़ आईडी: 2230670) आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam